Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 7, 2016

ஸ்பைசி ஓட்ஸ் மோர் செய்வது எப்படி


தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் - அரை கப் (வறுத்து கொள்ளவும்)
தயிர் - அரை கப்
ப.மிளகாய் - 2
இஞ்சி துருவியது - 1 ஸ்பூன்
புதினா இலை - 1 கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை பழம் - பாதி
தண்ணீர் - 1 கப்

செய்முறை :

* ஓட்சில் தயிர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

* மிக்சியில் புதினா இலை, ப.மிளகாய், இஞ்சி போட்டு நன்றாக அரைக்கவும்.

* அடுத்து அதில் ஊறவைத்த ஓட்ஸ், தயிர் கலவையை ஊற்றி நன்றாக மென்மையாக அரைக்கவும்.

* அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் தண்ணீர், உப்பு, எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலக்கவும்.

* இதை பெரிய கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.

* வெயிலுக்கு உடலுக்கு இதம் தரும் பானம் இது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.