மன்னார்குடியில் அரசு மருத்துவமனை டாக்டர் திட்டியதால், நர்ஸ் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்டார். டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மறியலில் ஈடுபட்ட செவிலியர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.நாகை மாவட்டம் கீழ்வேளுர் அருகேயுள்ள ராதாமங்கலத்தை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா. இவரது மகள் திவ்யபாரதி (22). மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் 6 மாதத்துக்கு முன்பு நர்சாக பணியில் சேர்ந்தார். நேற்று முன்தினம் பணியிலிருந்த டாக்டர் சர்மிளா, திவ்யபாரதியை திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த திவ்யபாரதி அங்கு பாட்டிலில் இருந்த ஆசிட்டை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கிய திவ்யபாரதியை தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதைக்கேள்விப்பட்ட மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையின் செவிலியர்கள், மருந்தாளுனர்கள் மற்றும் பணியாளர்கள் திவ்யபாரதியின் சாவுக்கு காரணமாக டாக்டர் சர்மிளா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆஸ்பத்திரி வாசலின் முன்பு நேற்று பகல் 12 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மன்னார்குடி போலீசார் சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக சொன்னார்கள். அப்போது இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மருந்தாளுனர் சங்க மாநில நிர்வாகி கோவிந்தராஜனையும், செவிலியர்களையும் போலீசார் தாக்கினர். பின்னர் கோவிந்தராஜனை தரதரவென போலீஸ் வேனுக்கு இழுத்து சென்றனர். இதை செவிலியர்கள் தடுக்க முயன்றனர். இதில் சந்திரகலா (52) என்ற செவிலியர் மயங்கி விழுந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கோவிந்தராஜனை போலீசார் விட்டுவிட்டனர். இதையடுத்து நர்ஸ் சந்திரகலா, மாநில நிர்வாகி கோவிந்தராஜனை தாக்கிய இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதனையறிந்து அங்கு சென்ற மன்னார்குடி டி.எஸ்.பி ரவிச்சந்திரன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தாக்குதலுக்கு காரணமான இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.