Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 6, 2016

சிகிச்சைக்கு பணமில்லை - 3 மாத உடல் நலமில்லா குழந்தையை கொன்ற கொடூர பாட்டி


உடல் நலம் குன்றி இருந்த 3 மாத குழந்தைக்கு சிகிச்சை அளிக்க பணம் இல்லாததால் அக்குழந்தையை அதனுடைய பாட்டியே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவிலுள்ள உந்திரி பகுதியில் தான் இந்த இரக்கமற்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த சுசீலா என்பவரின் மகனுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு பிறந்ததில் இருந்தே உடல் நலமில்லை. எனவே ஏராளமாக செலவு செய்து குழந்தைக்கு சிகிச்சையளித்து வந்ததார்கள். 3 மாதங்கள் கடந்தும் அதற்கு உடல் நலம் சரியாகவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் கடன் வாங்கி குழந்தைக்கு சிகிச்சைக்காக செய்தனர். இதற்கு மேலும் சிகிச்சை அளிக்க வீட்டில் பணம் இல்லை.
இதனால் அக்குழந்தையை கொன்று விட பாட்டியான சுசீலா முடிவு செய்தார்.  குழந்தையின் பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பிஞ்சு குழந்தையை தூக்கி குளியலறைக்கு சென்றார். அங்கிருந்த தண்ணீர் முழுவதும் நிரப்பப்பட்ட பீப்பாய்க்குள் குழந்தையை நீரில் அமுக்கி கொன்றார். பின்னர் ஏதும் அறியாதது போல வீட்டில் அமர்ந்து இருந்தார்.
பின்னர் வீடு வந்த பெற்றோர்கள் குழந்தையை தேடினர். சுசீலாவிடம் கேட்டதற்கு தமக்கு தெரியாது என்றும் ஆனால் சிறிது நேரத்திற்கு முன்பு வாசல் பக்கம் 2 பெண்கள் நின்று கொண்டு இருந்ததை பார்த்தேன். அவர்கள் குழந்தையை கடத்தி சென்று இருக்கலாம் என்றும் கூறி அவர்களை திசை திருப்பினார். பின்னர் வீடு முழுவதும் தேடிய போத குழந்தை பீப்பாய்குள் மூழ்கி இறந்திருந்தததை கண்டு அதிர்ந்தனர். பின்னர் கதறிய அவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து நடத்திய தீவிர விசாரணையில் குழந்தைக்கு மேற்கொண்டு சிகிச்சை அளிக்க பணம் இல்லாததால் அதை கொன்றதாக பாட்டி சுசிலா கூறியது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. இதனையடுத்து சுசீலாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது பற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து விசாரித்த போது பாட்டியே குழந்தையை கொலை செய்து இருப்பது தெரியவந்தது. அவர் கைது செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.