Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 20, 2016

உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் தீவிர நிலையில் உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்!!


உயர் இரத்த அழுத்தம் என்பது அமைதியாக இருந்து ஆளைக் கொல்லும். ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பின், அதற்கான அறிகுறிகள் அவ்வளவு எளிதில் வெளிப்படாது. அப்படியே தென்பட்டாலும், நிறைய பேர் சாதாரணமாக எண்ணி விட்டுவிடுவார்கள்.

ஏனெனில் உயர் இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் அன்றாடம் நாம் சந்திக்கும் சிறு பிரச்சனைகள் போன்று தான் இருக்கும். ஆனால் அப்படி தினமும் ஒருவர் ஒரு பிரச்சனையை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகி பிரச்சனைக்கான காரணத்தையும், தீர்வையும் அறிய வேண்டும்.

இங்கு உயர் இரத்த அழுத்தம் முற்றி உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கடுமையான தலைவலி
இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், மண்டை ஓட்டுப் பகுதியில் அளவுக்கு அதிகமான அழுத்தம் உருவாக்கப்படும். அதுவும் மூளையில் உள்ள நரம்புகளில் அளவுக்கு அதிகமான இரத்தம் அழுத்தப்பட்டு, மண்டை ஓட்டில் கடுமையான வலி ஏற்பட்டு, அதன் காரணமாக தான் ஒற்றைத் தலைவலி அல்லது கடுமையான தலைவலி ஏற்படுகிறது. எனவே கவனமாக இருங்கள்.

மங்கலான பார்வை
உயர் இரத்த அழுத்தம் மூளையின் சில பகுதியில் வீக்கத்தை உருவாக்கி, அதனால் கண்களுடன் தொடர்புடைய நர்ம்புகள் நேரடியாக பாதிக்கப்பட்டு, மங்கலான பார்வையை சந்திக்கக்கூடும்.

மூச்சுவிடுவதில் சிரமம்
இதய அறைகளில் ஏற்படும் அதிகப்படியான அழுத்தத்தினால், இதய அறைகளின் சுவர்கள் கடினமாகி, இரத்தம் செல்வதற்கான இடைவெளி குறைந்து, அதனால் உடலின் மற்ற பாகங்களில் இரத்த ஓட்டம் குறைவாக இருக்கும். மேலும் நுரையீரலில் இரத்தம் அதிகமாக நுழைந்து, மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும்.



மிகுந்த சோர்வு
உயர் இரத்த அழுத்தத்தினால், உடலின் உள்ளுறுப்புகள் பலவீனமாக இருக்கும். அதுமட்டுமின்றி, இதய அறைகள் கடினமாக்கப்படுவதால், இதயத்தினால் உடலின் மற்ற உறுப்புக்களுக்கு அழுத்தப்படும் இரத்தத்தின் அளவு குறைந்து, உடல் மிகுந்த சோர்வுடன் இருக்கும்.

குமட்டல்
உயர் இரத்த அழுத்தம் இருக்கும் போது, இதயம் குறைவாக இரத்தத்தை அழுத்துவதால், மற்ற உறுப்புகளுக்கு செல்லும் இரத்த அளவு குறையும். இந்நேரம் இதயத்தினுள் அழுத்தம் அதிகரிக்கப்பட்டு, மூளைக்கும் சரியாக இரத்தம் செல்லாமல், அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை உணரக்கூடும்.

மூக்கில் இரத்தம் வடிதல்
உயர் இரத்த அழுத்தம் இருந்தால், மூக்கில் இருந்து இரத்தம் வடியும் என்பது தெரியுமா? உங்களுக்கு திடீரென்று அளவுக்கு அதிகமாக மூக்கில் இருந்து இரத்தம் வடிந்தால், அதற்கு உயர் இரத்த அழுத்தம் தான் முதன்மையான காரணமாக இருக்கும். எனவே இந்நேரத்தில் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

சிறுநீரில் இரத்தம்
சிறுநீர் கழிக்கும் போது, அத்துடன் இரத்தம் கலந்து வந்தால், சாதாரணமாக எண்ணாமல், உடனே மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் இது உயர் இரத்த அழுத்தம் தீவிரமாக இருப்பதை வெளிக்காட்டும் அறிகுறிகளுள் ஒன்று.

நெஞ்சு வலி
முக்கியமாக உயர் இரத்த அழுத்தம் முற்றிய நிலையில் இருக்கும் போது, நெஞ்சு வலியை உணரக்கூடும். சில சமயங்களில் மாரடைப்பையோ அல்லது பக்கவாதத்தையோ கூட அது உண்டாக்கலாம்.

இன்னும் முற்றிய நிலையெனில்,
உயர் இரத்த அழுத்தம் மிகவும் முற்றிய நிலையில் சிகிச்சை மேற்கொள்ளப்படாமல் இருந்தால், அதனால் சிறுநீரக செயலிழப்பு, பார்வை இழப்பு, இதய நோய்கள் போன்றவற்றையும் சந்திக்க வேண்டி வரும். எனவே கவனமாக இருங்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.