யாரும் குடிச்சுட்டு நோட்டீஸ் கொடுக்கக் கூடாது என்று ஆரணியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ தொண்டர்களை எச்சரித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ கலந்து கொண்டு பேசும்போது, ''எங்கள் கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை பார்த்து, தி.மு.க. கலக்கம் அடைந்துள்ளது. இந்த தேர்தலில் மக்கள் தெளிவாக உள்ளனர். அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்ச போகிறது.
திராவிட கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக 234 தொகுதிகளிலும் கோடி கணக்கில் பணத்தை தயார் நிலையில் வைத்து உள்ளார்கள். இதை இரவோடு இரவாக 10 நிமிடத்தில் பட்டுவாடா செய்வதற்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதை தேர்தல் அதிகாரிகள் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். மேலும் வாக்காளர்கள் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கடந்த ஆட்சி காலத்தில் எங்கள் கட்சி, திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்து சில இடங்களில் போட்டியிட்டது. தற்போது மக்கள் நலக்கூட்டணி, தே.மு.தி.க., தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம்.
தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் மட்டுமே மாறி, மாறி ஆட்சி செய்து கொண்டு இருக்கிறது. 1967க்கு பிறகு தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பெரிய கூட்டணியாக மக்கள் நல கூட்டணி உருவாகி இருக்கிறது. எங்கள் கூட்டணி தொடங்கப்பட்டபோது இருந்த வாக்கு சதவீதத்தைவிட தற்போது வாக்கு சதவீதம் அதிகரித்து இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவித்து வருகிறது.
மக்கள் நலக்கூட்டணி ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாது என சிலர் வதந்தி பரப்பி வருகிறார்கள். அவற்றை எல்லாம் பொய்யாக்கி எங்கள் கூட்டணி மாபெரும் வெற்றியை பெரும். மக்கள் நல கூட்டணி தேர்தல் அறிக்கையை கட்சி நிர்வாகிகள் துண்டு பிரசுரங்களாக தயார் செய்து அவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
அப்படி நோட்டீஸ் விநியோகிக்கும்போது யாரும் குடித்துவிட்டு போகக் கூடாது. ஒருவர் குடித்துவிட்டு சென்றாலும் அனைவருக்கும் கெட்ட பெயர் ஏற்படும். நமது தேர்தல் அறிக்கையில் உள்ள ஒவ்வொரு வாக்குறுதியும் மக்களின் மனநிலையை கண்டிப்பாக மாற்றும்" என்றார் நம்பிக்கையுடன்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.