தாய்மொழியின் பலம் குழந்தைகளுக்குத்தான் தெரியும். அம்மாவின் குரல் குழந்தைக்கு பாதுகாப்பு மட்டுமல்ல; அதன் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது என்கிறது அறிவியல். ஆனால், குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள், நேராக இன்குபேட்டர்களுக்கு சென்றுவிடுவதால் தூக்கி அணைக்க அம்மாவின் விரலும், தூங்க வைக்க அம்மாவின் குரலும் கிடைப்பதில்லை. உலகம் முழுவதும் ஓர் ஆண்டுக்கு ஒன்றரை கோடி 'ப்ரீ மெச்சூர்' குழந்தைகள் (Premature Babies) பிறக்கின்றன.
இந்நிலையில் தொழில்நுட்பம் என்னும் அற்புதத்தை இங்கே பயன்படுத்த நினைத்தது சேம்சங். 'Voice of life' என்னும் ஆப், அம்மாவின் இதயத்துடிப்பையும் அவர் குரலையும் பதிவு செய்து, அந்த ஆடியோவை இன்குபேட்டருக்கும், அதில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்றவாறு மாற்றுகிறது. "குழந்தைக்கு அருகில் குட்டி குட்டி ஸ்பீக்கர் வைத்து அந்த ஆடியோவை ஒலிபரப்பினால், குழந்தையிடம் நல்ல முன்னேற்றம் தெரிகிறது" என்கிறார்கள் மருத்துவர்கள்.
இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இந்த ஆப் வரவில்லை. ஆனால், இந்த ஆப் நிச்சயம் ஒரு முக்கியமான குறையை தீர்க்கப்போவதாக உலக மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
இந்த ஆப் என்ன செய்கிறது என்பதை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.