நெல்லை மாவட்டத்தில் இன்று (12-ம் தேதி) நடைபெற்ற ஜெயலலிதா பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த கட்சியினர் மதுக்கடைகளில் குவிந்ததால் டாஸ்மாக் விற்பனை இருமடங்காக எகிறியது.
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா இன்று (12-ம் தேதி) பாளையங்கோட்டை பெல்பின்ஸ் மைதானத்தில் நடந்த பொதுக்க்கூட்டத்தில் பேசினார். இதற்காக மூன்று மாவட்டங்களிலும் இருந்து திரளான தொண்டர்கள் அழைத்து வரப்பட்டு இருந்தனர். பொதுக்கூட்டத்துக்கு வந்தவர்கள் பலர் அருகில் இருந்த டாஸ்மாக் கடைகளை தேடிச் சென்றனர்.

பிரசாரம் முடிந்த பின்னர் அருகில் இருந்த மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, வி.எம்.சத்திரம் கடையின் உள்ளே அமரக்கூட இடம் இல்லாத அளவுக்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் கட்சிக்காரர்கள், கடையின் முன்பாக நின்றபடியே குடித்தனர். இதனால், அந்த வழியாக சென்ற பொதுமக்களும் பெண்களும் அச்சத்துடன் அந்த இடத்தை கடந்து சென்றனர். சமாதானபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அருகில் வெளியூர்களில் இருந்து வந்தவர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. அதனால், பொதுக்க்கூட்டம் முடிந்து வந்தவர்கள் கடைகளுக்கு சென்ற பின்னரே வாகனத்தில் ஏறியதை பார்க்க முடிந்தது.

வெளியூர்களில் இருந்து வந்தவர்களால் நகருக்கு ஒதுக்குப்புறமான கடைகளில் கூட்டம் அலைமோதியது. பல டாஸ்மாக் கடைகளின் முன்பாக கட்சிக் கொடி கட்டிய வேன்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. எங்கு பார்த்தாலும் கரை வேட்டி கட்டியவர்களாகவே மதுக்கடைகளில் தடுமாறியபடி இருந்தனர். அவசரமாக அவர்கள் குடித்து விட்டு வாகனங்களில் ஏறியதையும் காண முடிந்தது.

நெல்லை மாவட்டத்தில் மட்டும் 226 மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகளின் மூலமாக நாள்தோறும் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு விறபனை நடைபெற்று வந்தது. ஆனால், இன்று (12-ம் தேதி) அ.தி.மு.க பொதுக்கூட்டம் நடந்ததால் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு அதிகமாக விற்பனை நடைபெற்றதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.