Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 9, 2016

ராஜஸ்தான் பாடப்புத்தகத்தில் இருந்து நேரு பெயர் நீக்கம்!


ராஜஸ்தான் மாநிலத்தில் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து நேரு உள்ளிட்ட காங்கிரசின் சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு நீக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் நேரு உள்பட அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் மற்றும் சரித்திரங்கள் இடம் பெற்றிருந்தது. மேலும், சுதந்திரத்திற்கு பின்பு அரசு அமைக்க ஜவஹர்லால் நேரு மற்றும் சர்தார் வல்லபாய் படேல் ஆகியோரின் பங்களிப்புகள் குறித்து விபரமாக இடம் பெற்று இருந்தது.

இந்நிலையில், தற்போது அம்மாநில பாடத்திட்டத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதில், மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், வீர் சர்வார்கர், பகவத் சிங், லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர் ஆகியோரின் வரலாறுகள் இடம் பெற்றுள்ளது. ஆனால், நேரு உள்ளிட்ட காங்கிரசின் சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. மேலும், இந்தியாவின் முதல் பிரதமர் யார்? என்பது குறித்தும் விவரங்கள் கொடுக்கப்படவில்லை.

இதுகுறித்து, அம்மாநில கல்வித்துறை அமைச்சர் வாசுதேவ் தேவ்னானி கூறுகையில், ''நான் இன்னும் அந்த புத்தகத்தை பார்க்கவில்லை. இனிமேல்தான், பார்க்க வேண்டும். தற்போது பாடத்திட்டங்கள் அனைத்தும் தன்னாட்சி அமைப்பால் உருவாக்கப்படுகிறது. எனவே, இதில் மாநில அரசோ, நானோ தலையிட முடியாது'' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.