Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 25, 2016

எதிர்காலத்திலும் நுழைவுத் தேர்வை எழுத நிர்பந்திக்க கூடாது! -மோடிக்கு ஜெயலலிதா கடிதம்


மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்து அவசர சட்டம் பிறப்பித்ததற்கு நன்றி. எதிர்காலத்திலும் நுழைவுத் தேர்வை எழுத நிர்பந்திக்க கூடாது என்று பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்து முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில், ''நடப்பாண்டு மருத்துவ நுழைவுத் தேர்வை ஒத்தி வைத்ததற்கு நன்றி. அவசர சட்டத்தால் இட ஒதுக்கீட்டின் பயனை மாணவர்கள் இந்த ஆண்டு அனுபவிப்பார்கள்.

நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பால், லட்சக்கணக்கான மாணவர்களும், பெற்றோர்களும், மனஅழுத்தத்தில் இருந்து விடுபட்டுள்ளனர். எதிர்காலத்திலும் மருத்துவ நுழைவுத் தேர்வை எழுத நிர்பந்திக்க கூடாது" என்று கூறி உள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.