தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றிப் பெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்வரானதற்காக திருப்பதி திருமலைக்குச் சென்று ஏழுமலையானுக்கு நன்றி செலுத்தினார் நடிகை நமீதா.
நடிகை நமீதா சமீபத்தில்தான் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். தேர்தல் பிரச்சாரத்தில் அவர் ஈடுபடவில்லை என்றாலும், அவ்வப்போது மீடியாவில் அதிமுகவுக்கு ஆதரவாகப் பேசி வந்தார்.
தேர்தலுக்கு ஒரு வாரம் இருக்கும்போது அவர் திருமலைக்குச் சென்று ஏழுமலையான தரிசித்தார். தரிசனம் முடிந்து வெளியில் வந்த அவர், அதிமுகவின் வெற்றிக்காவும் மீண்டும் ஜெயலலிதா முதல்வராகவும் பிரார்த்தனை செய்ததாகக் கூறினார்.
இப்போது அதிமுக தேர்தலில் வென்று, முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்கிறார். தனது பிரார்த்தனை நிறைவேறியதற்காக நேற்று திருமலைக்குச் சென்ற நமீதா, ஏழுமலையானுக்கு நன்றி செலுத்தினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நல்ல பிரார்த்தனைகளைக் கடவுள் எப்போதும் நிறைவேற்றித் தந்துவிடுகிறார். அம்மா மீண்டும் முதல்வராகியிருப்பது மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. அம்மாவின் ஆட்சியில் தமிழகம் மிகச் சிறப்பான வளர்ச்சியைப் பெறும். தமிழகத்தின் நிரந்தர முதல்வர் அம்மாதான்," என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.