சேரநாடு என்னும் கிராமத்தில் கோவில் ஒன்று இருந்தது. அந்தக் கோவிலின் முன்பு பாறை ஒன்றும் இருந்தது. அந்த கோவில் பாறை அற்புத சக்தி கொண்டதாக இருந்தது. கோவில் பாறையின் முன்பு யாரும் பொய் சொல்ல முடியாது. பொய் சொன்னால், அக்கோவில் பாறை உடனே அவர்களைத் தண்டித்து விடும். எனவே, அவ்வூரில் யாருமே, தவறு செய்யத் துணியவில்லை.
ஆனால், அவ்வூரில் ராமசாமி பண்ணையார் என்பவர் வசித்து வந்தார். அவர் பேராசைக்காரர். அவர் அப்பாவி ஏழை மக்களை தனது வயலில் மிகக் கடுமையாக வேலை வாங்கி, மிகக் குறைவான கூலி கொடுத்து வந்தார்.
ஏழை மக்கள் எப்போதேனும் தங்கள் அவசரத் தேவைக்கு பண்ணையாரிடம் பணம் கேட்டால், அதிக வட்டிக்கு பணம் தருவார். படிப்பறிவில்லாத மக்களிடம் தான் நியாயமாக நடந்து கொள்வதாகக் கூறுவார். படிப்பறிவில்லாத ஏழை மக்களுக்கு பண்ணை யாரின் வஞ்சகம் புரியவில்லை.
அவ்வூரில் வெற்றி மாறன் என்பவன் வெளியூருக்குச் சென்று, கல்வி கற்றுக் திரும்பினான். அவனுக்கு பண்ணையாரின் ஏமாற்று வேலை தெரிந்துவிட்டது. அவன் ஊராரிடம் பண்ணையார் செய்யும் துரோகத்தைப் பற்றி விளக்கிக் கூறினார். ஊர் மக்களும், பண்ணையாரைப் பற்றி அறிந்து கொண்டனர்.
ஊர் மக்கள் விழித்துக் கொண்டதை பண்ணையாரும் தெரிந்து கொண்டார். எனவே, அவர் ஊர் மக்களிடமிருந்து கொள்ளை யடித்த பணத்தை தங்கக் கட்டிகளாக வாங்கிக் கொண்டார். தங்கக் கட்டிகளை ஒரு மூங்கில் தடியில் போட்டு, ஊன்று கோல் போல தன் கையிலேயே வைத்துக் கொண்டார். யாரேனும் கேட்டால், தான் யாரையும் ஏமாற்றவில்லை என்றும், தன் வீட்டில் பணம் எதுவும் இல்லை என்றும் கூறினார்.
ஊர்ப் பெரியவர்கள் வீட்டை சோதனையிட்டபோது, வீட்டில் பணம் ஏதும் அகப்படவில்லை.
பண்ணையார் மீதான வழக்கை கோவில் பாறையிடம் கொண்டு செல்வதாக முடிவெடுத்தனர். பண்ணையாரும் அதற்கு உடன்பட்டார். ஊர் மக்கள் எல்லாரும் கூடியிருக்க, பண்ணையார் கோவில் பாறையின் முன்னே நின்றார்.
""ஏழைகளின் பணம் எதுவும் தன்னிடம் இல்லை என்று கூற வேண்டும். அப்போது தான் நாங்கள் நம்புவோம்!'' என்று ஊர் மக்கள் தெரிவித்தனர். பண்ணையாரும் அதற்கு ஒப்புக் கொண்டார்.
ஊர் மக்கள் கோவிலில் கூடினர். பண்ணையார் தங்கக்கட்டிகள் அடங்கிய மூங்கில் தடியை, தன்னுடன் எடுத்து வந்தார். அவர் தன் மூங்கில் தடியை தன் வேலைக்காரனிடம் சற்று நேரம் வைத்துக் கொள்ளும்படி கூறிவிட்டு, கோவில் பாறையின் முன்னே சென்று நின்றார். வேலைக்காரனுக்கும் அதனுள்ளே தங்கக்கட்டிகள் இருப்பது தெரியாது.
கோவில் பாறையின் முன்னே சென்று நின்ற பண்ணையார், ""கோவில் பாறையே! ஊர் மக்களின் பணம் எதுவும் என் கையில் இல்லை!'' என்று கூறினார்.
அவ்வேளையில் தங்கக் கட்டிகள் அடங்கிய மூங்கில் தடி பண்ணையாரின் கையில் இல்லை அல்லவா? எனவே, கோவில்பாறை பண்ணையாரை எதுவும் செய்யவில்லை.
கோவில்பாறை பண்ணையாரைத் தண்டிக்காததைக் கண்டு ஊர் மக்கள் எல்லாரும் வியந்தனர். கோவில்பாறையும் நீதி தவறி விட்டதா அல்லது கோவில்பாறையின் ஆற்றல் நீங்கிவிட்டதா என்று அவர்கள் வருந்தினர். ஆனால், மறுகணமே யாருமே எதிர்பார்க்காத படி கோவில் பாறையின் அருகிலிருந்த புதரிலிருந்து பாம்பு ஒன்று வெளிப்பட்டு பண்ணையாரை நோக்கி ஊர்ந்து வந்தது.
பண்ணையாரின் வேலைக்காரன், தன் எஜமானரைக் காப்பாற்றுவதற்காக, தன் கையிலிருந்த மூங்கில் தடியை எடுத்து பாம்பை அடித்தான். ஆனால், பாம்பு அதற்குள் குழிக்குள் சென்று மறைந்து விட்டது. ஆனால், மூங்கில் தடி தரையில் மோதிய வேகத்தில் உடைந்தது. அதனுள்ளே இருந்த தங்கக் கட்டிகள் வெளியே வந்து விழுந்தன. பண்ணையார் செய்தி ரகசியம் அம்பலமாகி விட்டது.
பண்ணையார் அவமானத்தால் கூனிக் குறுகி நின்றார். அவர் தான் செய்த தவறை இப்போது ஊராரிடம் ஒப்புக் கொண்டார். தங்கக் கட்டிகளை விற்று, பணத்தை ஏழைகளிடமே திருப்பித் தந்துவிடுவதாக ஒப்புக் கொண்டார். பண்ணையார் கோவில் பாறையை தன் சாதுர்யத்தால் ஏமாற்ற நினைத்தாலும், கோவில் பாறை ஊர் மக்களுக்கு நல்ல தீர்ப்பினை வழங்கிவிட்டது. கோவில் பாறையின் மகிமையை மக்கள் உணர்ந்து அதை வணங்கிச் சென்றனர்

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.