Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 11, 2016

சோமாலியா உடன் ஒப்பீடு எதிரொலி: ட்விட்டரில் மோடியை 'விரட்டிய' கேரள நெட்டிசன்கள்!


சோமாலியா உடன் ஒப்பீடு எதிரொலி: ட்விட்டரில் மோடியை 'விரட்டிய' கேரள நெட்டிசன்கள்!கேரளாவில் பிரதமர் மோடி கூறிய கருத்துக்கு எதிராக டிரெண்டிங் ஆகி வருகிறது ‘போ மோனே மோடி’ என்ற ட்விட்டர் ஹேஷ்டேக்.

கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, பழங்குடி மக்களின் குழந்தைகள் இறப்பு விகிதம் சோமாலியா நாட்டை ஒத்திருக்கிறது என்/று பிரதமர் மோடி கூறியதையடுத்து அவருக்கு எதிராக ட்விட்டரில் கடும் எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளன.

#PoMoneModi (போ மகனே மோடி) என்ற ஹேஷ்டேக் நடிகர் மோகன்லால் படமான நரசிம்ஹம் என்பதில் வரும் வசனம் போ மோனே தினேஷா என்பதை எதிரொலித்து உருவாக்கப்பட்டது.

இதில் பிரதமர் மோடியின் கருத்துக்கு எதிராக சுமார் 35,000-த்துக்கும் மேற்பட்ட ட்வீட்கள் குவிந்துள்ளன.

ட்விட்டரில் அதிகம் பின் தொடரப்படும் தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி 2-வது இடத்தில் இருக்கும் நிலையில் தற்போது போ மோனே மோடி பிரபலாமாகியுள்ளது. இந்நிலையில் இன்று கேரளாவில் தனது கடைசி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார் பிரதமர் மோடி.

மேலும் இது தொடர்பாக உருவாக்கப்பட்ட #Somalia என்ற ஹேஷ்டேக்கும் 15,000 ட்வீட்களுடன் டிரெண்ட்டிங் ஆகி வருகிறது.

ட்விட்டரில் மோடியை காய்ச்சுபவர்களில் பிரதான பங்கு வகிப்பவர்கள் காங்கிரசார் மற்றும் இடது சாரிக் கட்சியினர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.