Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 7, 2016

செல்போன் கதிர்வீச்சால் மனிதர்களுக்கு தீங்கு கிடையாதாம்!


செல்போன் கதிர்வீச்சால் மனிதர்களுக்கு எந்த தீங்கும் கிடையாது என்று ஆய்வில் தெரிய வந்திருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

செல்போன் மற்றும் செல்போன் கோபுர கதிர்வீச்சால் மனிதர்களுக்கும், பறவைகளுக்கும் தீங்கு ஏற்படுவதாக கூறப்படுவது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது எம்.பி. ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதில் அளிக்கும்போது, ''இதுவரை நடத்திய ஆய்வுகள் அத்தனையிலும், செல்போன் மற்றும் செல்போன் கோபுர கதிர்வீச்சால் மனிதர்களுக்கோ, பறவைகளுக்கோ தீங்கு ஏற்படுவதாக கண்டறியப்படவில்லை.

இது பற்றி உலக சுகாதார நிறுவனம் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திய ஆய்வில்கூட செல்போன் கதிர்வீச்சால் உடல் நலம் பாதிக்கப்படுவதாக கூறப்படுவதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது என்றே தெரிய வந்து இருப்பதாக தெளிவுபடுத்தி இருக்கிறது. செல்போன் மற்றும் செல்போன் கோபுர கதிர்வீச்சால் உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படும் என்ற பிரச்னை இந்தியாவில் மட்டும் ஏன் எழுப்பப்படுகிறது என்பது எனக்குத் தெரியவில்லை.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் செல்போன் சேவைகள் உள்ளது. ஆனால் இந்த கேள்விகள் அங்கெல்லாம் எழுப்பப்படவில்லை. நாம் ‘டிஜிட்டல் இந்தியா‘வை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இதுபோன்று பாதகமாக பிரசாரம் செய்வது கவலை அளிக்கிறது. நாட்டின் பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்கள் செல்போன் அல்லது செல்போன் கோபுரங்களால் மனிதர்களுக்கும், பறவைகளுக்கும் எவ்வித தீங்கும் ஏற்படவில்லை என்பது தொடர்பாக 6 முக்கிய தீர்ப்புகளை அளித்து இருக்கின்றன.

அப்படி இருந்தும் செல்போன் கதிர்வீச்சு தொடர்பான தவறான பிரசாரம் ஓய்ந்தபாடில்லை. பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் செல்போன் கதிர்வீச்சு பற்றி உறுப்பினர்கள் இனிமேலும் இதுபோன்ற கேள்விகளை எழுப்பவேண்டாம். செல்போன் சேவைகளில் பாதுகாப்பு அளவீடுகள் உலக அளவில் மிகவும் கடுமையாக்கப்பட்டு இருக்கிறது" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.