Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 9, 2016

சீனாவில் நிலச்சரிவு: 34 பேரை காணவில்லை 7 பேர் காயம்


சீனாவின் தெற்கு பியூஜியான் மாகாணத்தில் பலத்த மழையினால் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் குறைந்தது 34 தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர்.  7 பேர் காயமடைந்துள்ளனர்.

 இது பற்றி ஜின்ஹுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், பியூஜியான் மாகாணத்தின் டெய்னிங் கவுண்டி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.  இதனால், நீர்மின் உற்பத்தி நிலைய கட்டிட பணிக்காக அமைக்கப்பட்ட தற்காலிக அறை மண்ணுக்குள் புதைந்து போனது.   அந்த நிலையத்தின் அலுவலகங்களும் சேதமடைந்தன.

 இன்று நண்பகல் வரை 34 பேரை காணவில்லை.  7 பேர் காயமுற்றுள்ளனர்.  அங்கு 191.6 மி.மீட்டர் அளவிற்கு பலத்த மழை பெய்தது.  இதனால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.  அங்கு மலைகள், ஏரிகள் ஆகியவை நிறைந்துள்ளன.  இச்சம்பவத்தை அடுத்து அனைத்து சுற்றுலா தலங்களையும் மூட சுற்றுலா நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

 சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங், கட்டிட சேதங்களுக்கு இடையே சிக்கியவர்களை மீட்கும்படி பியூஜியான் உள்ளூர் அரசாங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.