Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 11, 2016

ஒரு சீஸ் பர்கருக்காக அண்ணனை சுட்டுக் கொன்ற வாலிபர்


அமெரிக்காவில் சீஸ் பர்கருக்காக வாலிபர் ஒருவர் தனது அண்ணனை சுட்டுக் கொலை செய்துள்ளார்.
 
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தில் இருக்கும் செயின்ட் கிளவுட் நகரை சேர்ந்தவர் பெஞ்சமின் மிட்டன்டார்ப்(25). அவரது அண்ணன் நிக்கோலஸ் மிட்டன்டார்ப்(28). கடந்த 5ம் தேதி இரவு ஒரு சீஸ் பர்கருக்காக சகோதரர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
 
வாக்குவாதம் முற்றவே பெஞ்சமின் துப்பாக்கியை எடுத்து தனது அண்ணனின் மார்பில் சுட்டார். இதில் நிக்கோலஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெஞ்சமின் போலீசாருக்கு போன் செய்து கோபத்தில் தனது அண்ணனை சுட்டுக் கொன்றுவிட்டதாக தெரிவித்தார்.
 
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நிக்கோலஸின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை வழக்குப்பதிவு செய்து பெஞ்சமினை கைது செய்தனர்.
 
பெஞ்சமின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஒரே நேரத்தில் இரண்டு மகன்களை இழந்துவிட்டதாக பெஞ்சமினின் தாய் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.