Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 11, 2016

தமிழக - புதுவைத் தேர்தல்... டாஸ்மாக்குக்கு நான்கு நாட்கள் லீவ்... புதுச்சேரியிலும்தான்!


தமிழகம் - புதுவைக்கான சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 5 தினங்களே உள்ளதால், இறுதிக்கட்ட ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக உள்ளது.
 
வாக்குப்பதிவை அமைதியாக நடத்த தேர்தல் கமிஷன் முழு அளவில் ஏற்பாடுகளை செய்துள்ளது.
 
தமிழக தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.
 
இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதியுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், நான், தேர்தல் டி.ஜி.பி., மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆணையாளர், வருமான வரித்துறை இயக்குனர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
தேர்தலையொட்டி வருகிற 14, 15, 16 மற்றும் 19-ந் தேதிகளில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும். இது தவிர அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கேரளாவில் சட்டமன்ற தேர்தல் நடப்பதால் அங்கும் மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும்.
 
ஆனால் ஆந்திரா, கர்நாடகம் ஆகிய பக்கத்து மாநிலங்களின் எல்லையோரங்களில் உள்ள மதுபான கடைகளை அடைக்க அந்த மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. அந்த 4 நாட்களும் ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைத்து ரவுடிகள் நடமாட்டம் இருக்கிறதா? என்று தீவிரமாக கண்காணிக்கப்படும். சோதனை சாவடிகள் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படும்.
 
புதுவையிலும் நோ சரக்கு!
 
புதுச்சேரியில் மதுவகைகள் விலை குறைவாக இருக்கும் என்பதால் அங்கிருந்து தமிழகத்துக்கு கடத்தி கொண்டு வந்து விடாமல் இருக்க தீவிர கண்காப்பில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து கள் தமிழகத்துக்கு கடத்தி வராமல் இருக்கும் வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.