டாஸ்மாக் கடைகள் பிற்பகல் 12 மணிவரை மூடப்பட்டு இருந்தாலும் காலை முதலே மதுபான பார்கள் திறந்துள்ளது. இதனால் குடிமகன்கள் ஜாலியாக பார்களில் ஜாலியாக குடித்துவிட்டு செல்கின்றனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, ‘‘அதிமுக ஆட்சிக்கு வந்தால் மதுபான கடைகள் படிப்படியாக குறைக்கப்படும்’’ என்று ஜெயலலிதா அறிவித்தார். தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றவுடன் மதுபான விற்பனை நேரத்தை காலை 10 மணி முதல் இரவு 10 மணி என்று இருந்ததை, பகல் 12 மணி முதல் இரவு 10 மணிவரை என 2 மணிநேரம் குறைத்தும், 500 மதுபான கடைகள் மூடப்படும் என்றும் உத்தரவில் கையெழுத்திட்டார்.
இதையொட்டி தமிழகத்தில் 6,823 டாஸ்மாக் மதுபான கடைகளில் எதை மூடலாம் என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த 500 கடைகள் குறித்து பட்டியல் தயாராக உள்ளது. மேலும், மதுபான கடைகளை ஒட்டி அனுமதிக்கப்பட்ட பார்கள், அனுமதி இல்லாத பார்கள் என இரு வகையான பார்கள் செயல்பட்டு வருகின்றன. அனுமதி பெற்று நடத்தப்படும் பார்களாக இருந்தாலும், அனுமதி பெறாமல் நடத்தப்பட்டு வரும் பார்களாக இருந்தாலும், இவை காலை முதல் நள்ளிரவு வரை மதுபான விற்பனை தடையின்றி நடக்கிறது.
டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நேரம் 2 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ள நிலையிலும், சராசரியாக நாள் ஒன்றுக்கு விற்பனையாகும் ரூ. 70 கோடி என்ற அளவில் இருந்து மதுபான விற்பனை குறையவில்லை. மாவட்ட டாஸ்மாக் மேலாளர், பார் உரிமையாளர்கள் மற்றும் உள்ளூர் காவல் துறை அதிகாரிகள், கலால் பிரிவினர் என அனைவரின் கூட்டு நடவடிக்கையால், பார்களில் மது விற்பனை காலை முதல் நள்ளிரவு வரை சிறப்பாக நடந்து வருவதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
மதுபான கடைகள் 12 மணிக்கு திறக்கப்பட்டாலும் அதனுடன் இணைந்த பார்களும் 12 மணிக்கே திறக்கப்பட வேண்டும் என்ற விதிமுறைகள் காற்றில் பறக்கவிட்டு, அதை முன்கூட்டியே திறந்து விற்பனை செய்கின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.