5 வருடத்துக்கு குறைவாக உள்ள பி.எஃப் கணக்கிலிருந்து எடுக்கப்படும் பணத்துக்கான டிடிஎஸ் (Tax Deducted at Source) வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவன பணியாளர்கள் சொந்தமாக தொழில் துவங்குதல், வேலை விட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு போவது, மற்ற சில காரணங்களினால் பணியை தொடர முடியாத நிலையில் தங்களது கணக்கில் உள்ள பிஎஃப் பணத்தை இடையில் எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இப்படி எடுக்கும் பணத்துக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுகிறது.
நிதிச்சட்டம் 2016 பிரிவு 192A ன் படி, பிஎஃப் கணக்கிலி ருந்து வெளியே எடுக்கும் பணம் ரூ.30 ஆயிரம் அல்லது அதற்கு குறைவாக இருந்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் என்ற விதி இதுவரை நடைமுறையில் இருந்தது. இந்த வரம்பு தற்போது ரூ.50 ஆயிரம் என அதிகரிக்கப்பட்டுள்ளது. இது ஜூன் 1 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
டிடிஎஸ் பிடித்தம் செய்வதால் தேவையில்லாமல் பிஎஃப் கணக்கை முடித்து அதிலிருந்து பணத்தை எடுப்பது குறையும். நீண்ட கால சேமிப்பு அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
மூத்த குடிமக்கள் படிவம் 15G, மற்றவர்கள் 15H சமர்பித்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்யமாட்டார்கள். மேலும் பணியிடம் மாறும்போது பிஎஃப் உறுப்பினர் ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்குக்கு பணத்தை (transfer)மாற்றும்போது டி.டி.எஸ் கிடையாது.
மேலும் பான்கார்டு எண் சமர்பித்தால் 10 சதவிகிதம் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். பான் எண் இல்லையெனில் கணக்கிலிருந்து எடுக்கப்படும் தொகைக்கு 34.608 சதவிகிதம் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.