Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 31, 2016

எலுமிச்சை ரசம் செய்முறை விளக்கம்


தேவையான பொருள்கள் :

எலுமிச்சை - 2
தக்காளி - 1
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
தனியா - 1 தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
மிளகாய் வற்றல் - 1
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி

செய்முறை:

* ஒரு பாத்திரத்தில் தக்காளியை நன்கு நசுக்கி விட்டு பிசைந்து கொள்ளவும்.

* பூண்டு, மிளகு, சீரகம், தனியா, மிளகாய் வற்றல் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

* எலுமிச்சை பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீர் ஊற்றி நசுக்கி வைத்திருக்கும் தக்காளிச் சாறு, அரைத்த மசாலா, மற்றும் பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கொத்துமல்லி தழை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்துக் நன்றாக கலந்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் தக்காளி மசாலா கலவையை சேர்த்து மிதமான தீயில் அடுப்பை வைக்கவும்.

* ரசம் நுரைத்து கொதி வரும் சமயம் எலுமிச்சைச் சாறு ஊற்றி இறக்கி மூடி விடவும். எலுமிச்சை சாறு ஊற்றியவுடன் கொதிக்க விடக்கூடாது.

* சுவையான எலுமிச்சை ரசம் ரெடி.

* ரசம் அதிகம் கொதித்துவிட்டால் கசந்துவிடும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.