கணவர் விபத்தில் இறந்ததால் மகள்களை காப்பாற்றுவதற்கு வக்கீல் தொழிலை விட்டு லாரி ஓட்டும் பெண்ணைக் கண்டு அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மத்தியபிரதேசம் மாநிலம் போபாலை சேர்ந்தவர் ராஜ்பகதூர். லாரி டிரைவர். இவரது மனைவி யோகிதா (வயது 34). வக்கீலுக்கு படித்துள்ளார். இவர்களுக்கு ஆர்சியா, ரகுபிந்து என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ராஜ்பகதூர் லாரி விபத்தில் இறந்து விட்டார். வக்கீல் தொழிலில் போதிய வருமானம் இல்லாமல் 2 பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு யோகிதா குடும்பம் நடத்தமுடியாமல் திண்டாடினார். குடும்பமே நிலைகுலைந்துபோனது. கனவுகள் சிதைந்தது. எனினும் தன்னம்பிக்கையை யோகிதா கைவிடவில்லை. கணவர் செய்த வேலையே தானும் செய்ய முடிவெடுத்த யோகிதா ஹெவி லைசென்ஸ் பெற்றார்.
யோகிதா அபார திறமையை கண்ட சில லாரி உரிமையாளர்கள் யோகிதாவை நம்பி லாரியை ஒப்படைத்தனர். உரிய நேரத்தில் சரக்குகளை கொண்டு செல்வதில் நம்பிக்கை பெற்றார்.
லாரியை லாவகமாக கையாளும் இவரது திறமை குறித்த தகவல் அந்த பகுதியில் பரவியது. இவரின் திறமையும், குடும்ப சூழ்நிலையும் அறிந்த பிரபல கம்பெனி ஒரு லாரியை இலவசமாக வழங்கியது. அதன்பின்னர் தன்னம்பிக்கையுடன் மூத்த மகள் ஆர்சியாவை என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்த்தார். 2-வது மகள் பிளஸ்-2 படித்து வருகிறார்.
இவருக்கு உதவும் வகையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வாய்ப்புகள் வழங்கின. கடந்த 7 நாட்களுக்கு முன்பு போபாலில் இருந்து 20 ஆயிரம் மதுபாட்டில்களை ஏற்றி கொண்டு யோகிதா புறப்பட்டார்.
நேற்று முன்தினம் பாலக்காட்டில் உள்ள அரசு மதுகுடோனுக்கு 20 ஆயிரம் மதுபாட்டில்களை பத்திரமாக கொண்டு வந்து சேர்த்தார். சுமார் 2 ஆயிரத்து 300 கி.மீட்டர் தூரம் லாரியை ஓட்டி வந்த யோகிதாவை கண்டு அதிகாரிகள் ஆச்சர்யம் அடைந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.