Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 9, 2016

சென்னையில் பெண் டாக்டர் கொலை.. கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுப்பு


சென்னை எழும்பூர் அருகே பெண் மருத்துவர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அவரது வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை எழும்பூர் அருகேயுள்ள காந்தி இர்வின் சாலையில் வசித்து வந்த ரோகினி பிரேம் குமாரி தனியார் மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இரண்டு கைகளும் கட்டப்பட்ட நிலையில் அவருடைய வீட்டில் ரோகினி பிரேம் குமாரி இறந்து கிடந்தார்.
 
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடத்திய சோதனையில் வீட்டின் பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த நகை, பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
 
உடலை கைப்பற்றிய போலீசார் கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.