Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 7, 2016

லட்சக்கணக்கான கூகுள் மற்றும் யாஹூ பயனாளர்களின் தகவல்கள் திருட்டு


நீங்கள் ஜிமெயில், ஹாட்மெயில் அல்லது யாகூ மின்னஞ்சல் கணக்கு இவற்றில் ஏதாவது ஒன்றை உபயோகிக்கும் பயனாளர்களாக இருந்தால் தற்போது அந்த கணக்குகளின் பாஸ்வேர்டை புதுப்பித்துக் கொள்வது நல்லது.

ஏனெனில் கூகுள், ஹாட்மெயில், யாஹூ மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் லட்சக்கணக்கான மின்னஞ்சல்களின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டுகள் திருடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் திருடப்பட்ட இத்தகவல்களை திருட்டுக் கும்பல் விற்பனை செய்துள்ளதாகவும் தெரிகிறது.

சுமார் 272.3 மில்லியன் அக்கவுண்ட்கள் ஊடுருவப்பட்டு, அதனுடைய ரகசிய மெயில்களும் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு திருடப்பட்ட தகவல்கள் பல லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள தகவலும் அதிர்வலைகளை ஏற்படுத்ததியுள்ளது. இந்த சதி வேலையில் ரஷ்யாவைச் சேர்ந்த நிழலகள குற்றவாளிகள் ஈடுபட்டு பல லட்சம் தகவல்களை திருடி விற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.