"சிறு, குறு விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். நான் முதல்வரானதும் முதல் நாள், முதல் கையெழுத்திடுவது இதுவாகவே இருக்கும்" என்று தனது தேர்தல் பிரசாரத்தில் கருணாநிதி உறுதி அளித்தார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி, திருவாரூர் தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறார். திருவாரூரில் இருந்து புதன்கிழமை மாலை வேன் மூலம் புறப்பட்ட கருணாநிதி, திருவாரூர் தொகுதிக்குட்பட்ட விளமல், தேவர்கண்ட நல்லூர், குளிக்கரை, அம்மையப்பன், முகந்தனூர் உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்து பேசும்போது, '' தி.மு.க. தேர்தல் அறிக்கையில், 'சிறு, குறு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்வோம்' எனக் கூறியுள்ளோம். அவர்களுக்கு மட்டுமின்றி அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் கடனை தள்ளுபடி செய்வோம். இதைத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக எடுத்துக்கொள்ளுங்கள்.

விவசாயிகளைக் காப்பாற்றாத அ.தி.மு.க. அரசைத் தோற்கடிக்க தயாராக வேண்டும். குளிக்கரை பகுதியில் உள்ள ஒட்டக்குடி வாய்க்கால் தூர்வாரப்படும். ஆறுகள், வாய்க்கால்களை தூர்வாராததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்புகள் அதிகம் ஏற்பட்டது. மக்கள் பலர் பலியானார்கள். இதுகுறித்து தி.மு.க. நிர்வாக ரீதியில் நடவடிக்கை எடுக்க, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த திருவாரூர் வாக்காளர்கள் ஒத்துழைக்க வேண்டும். மாற்று ஆட்சி உருவாக திருவாரூர் தொகுதியில் தி.மு.க.வை மகத்தான வெற்றிபெறச் செய்ய வேண்டும். திருவாரூரில் அரைவட்டச் சாலைத் திட்டம் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தயாரிக்கப்பட்டது. இதை அ.தி.மு.க. ஆட்சி, கிடப்பில் போட்டுவிட்டது. மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் அந்தத் திட்டம் உடனே முடிக்கப்படும்.

இந்தப் பகுதியில் மூடப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு திறக்கப்படும்.
திருவாரூர் மாவட்டத்தில், ஜெயலலிதா ஆட்சியில் ஏரளாமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்பட்டால்தான் விவசாயிகளுக்கு வாழ்வு கிடைக்கும்" என்றார்.
இந்தத் தேர்தல் பிரசாரத்தின்போது, காப்பனாமங்களம் கிராமத்தை சேர்ந்த கீதாலட்சுமி-பாண்டியன் தம்பதியர், தங்களது பெண் குழந்தைக்கு பெயர் வைக்கும்படி கருணாநிதியிடம் கூறினர். அந்த பெண் குழந்தைக்கு 'தமிழரசி' என்று பெயர் சூட்டிவிட்டு தனது பிரசார பயணத்தை மேற்கொண்டு தொடர்ந்தார் கருணாநிதி.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.