Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 14, 2016

மின் கட்டணம் - சொன்னதை செய்வார்.. சொல்லதையும் செய்வாரா ஜெ.,?


தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது ஒவ்வொரு பிரச்சாரக் கூட்டத்திலும், சொன்னதை செய்தேன், சொல்லாத பலவற்றையும் செய்தேன் என்று கூறிவருகிறார். ஆனால், இவர் மீண்டும் ஆட்சியை பிடித்தால் சொல்லாத "மாதந்தோறும் மின்கட்டணம் முறை" திட்டத்தையும் அமல்படுத்துவாரா? அதுதான் அவருடைய தேர்தல் அறிக்கையில் இல்லையே பின் எப்படி அறிவிப்பார் என்று கேட்காதீர்கள்.

ஏனெனில் தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளன. இதில் குறிப்பிட்டு சொல்லும்படி திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் 'மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப்போல அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் '100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் மின்சார கட்டணம் வசூலிக்கப்படாது' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.





இந்த தேர்தல் அறிக்கையை திமுக, அதிமுக அரசின் தேர்தல் அறிக்கையாக பார்க்காமல், எந்த அறிக்கையின் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பயன்பெறுவார்கள் என்பதை பார்த்தோமேயானால் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் மூலம் 60 சதவிகிதம் வரை மின் கட்டணம் சேமிக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு மின்வாரியத்தின் மின்கட்டணப் பட்டியல்படி, அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தின் மூலம், 78 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. ஒரு குடும்பம் இரண்டு மாதத்திற்கு 100 யூனிட் மின்சாரம் உபயோகித்தால் ரூ.120 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.



அதேசமயம் தமிழ்நாடு மின்வாரியத்தின் மின்கட்டணப் பட்டியல்படி, 500 யூனிட்கள் வரை பயன்படுத்தினால் ரூ.1,330 மின்கட்டணமாக செலுத்த வேண்டும். ஆனால் இதற்குமேல் 510 யூனிட்கள் வரை அதிகமாக பயன்படுத்தினால் ரூ.2,196 செலுத்த வேண்டியுள்ளது.





அதுவே 1000 யூனிட் வரை பயன்படுத்தினால் ரூ.5,430 மின் கட்டணம் வசூலிக்கப்படும். ரூ.2,660 செலுத்த வேண்டிய இடத்தில் ரூ.5,430 செலுத்த வேண்டியுள்ளது. இதனால் ரூ.2,770 அதிகமாக மக்களுக்கு செலவாகிறது. இரு மடங்கு வரையிலான அதிக பயன்பாட்டுக்கு நான்கு மடங்கு அதிகமாக மின்கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.





500 யூனிட் மின்சாரம் செலவோடு ஒப்பிட்டால், 100 யூனிட் இலவச மின்சாரம் என்பது மிக மிகச் சொற்பமாகத் தெரிகிறது. தற்போது இருக்கும் மின்கட்டண முறையை மாற்றி மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறை அமலானால், மக்கள் பயனடைவார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஆகையால் மாதந்தோறும் மின்கட்டணம் முறை திட்டத்தை திமுகவின் தேர்தல் வாக்குறுதியாக இருந்தாலும், இந்த தேர்தலில் அதிமுக (வேறு எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும்) வெற்றி பெற்று மீண்டும் அரியணையில் அமரும் பட்சத்தில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் மாதந்தோறும் மின்கட்டண முறையை ஜெயலலிதா மாற்றி அமைத்திட வேண்டும் என்பதே நம் விருப்பம்.

உங்களுடைய விருப்பத்தையும் கீழே தெரியப்படுத்தலாமே.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.