Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 23, 2016

6வது முறையாக ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார் ..! (படங்கள்)


6வது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா இன்று பதவி ஏற்றுக் கொண்டார். மேலும் 28 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. சென்னையில் கடந்த 20ம் தேதி நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டப்பேரவை அ.தி.மு.க. தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் அவர் ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து புதிய அரசு அமைக்க தன்னை அழைக்குமாறு உரிமை கோரினார். ஆளுநரும் புதிய அரசு அமைக்க ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்தார்.




இதைத்தொடர்ந்து, மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா இன்று பதவி ஏற்றுக் கொண்டார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் ஜெயலலிதாவுக்கு ஆளுநர் ரோசய்யா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். இதைத் தொடர்ந்து 28 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.



இந்த விழாவில் திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுக எம்எல்ஏக்கள் பொன்முடி, வாகை சந்திரசேகர், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பதிலாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மதுரை ஆதீனம், நடிகர் சரத்குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்பது இது 6வது தடவை. ஏற்கனவே, 1991 முதல் 1996ம் ஆண்டு வரையும், 2001 முதல் 2006ம் ஆண்டு வரையும், 2011 முதல் 2016 வரையும் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்துள்ளார். இடையில் 2 முறை அவர் பதவி விலக நேரிட்டு, மீண்டும் முதலமைச்சராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.