சென்னை, போயஸ் கார்டன் வீட்டில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி சென்ற முதல்வர் ஜெயலலிதா, பாதி வழியில் வீடு திரும்பியது, போலீசாரிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.
'இசட்' பிரிவு படையினர் மற்றும் மாநில போலீசாரின் பாதுகாப்புடன், முதல்வர் ஜெயலலிதா, நேற்று மதியம், 12:31 மணிக்கு,போயஸ் கார்டன் வீட்டில் இருந்து, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக, தலைமைச் செயலகம் நோக்கி புறப்பட்டார். அவரது காருக்கு முன், 'பைலட்'வாகனங்கள் சென்றன.
முதல்வரின், 'கான்வாய்' வாகனங்கள், 12:38 மணிக்கு, காமராஜர் சாலையில் உள்ள, டி.ஜி.பி., அலுவலகம் அருகே சென்ற போது, முதல்வர், திடீரென காரை வீட்டுக்கு திருப்பும்படி ஓட்டுன ரிடம் கூறி உள்ளார்.
இந்த தகவல், அவரது காருக்கு முன்னே சென்ற பைலட் -2, வாகன போலீசாருக்கு எட்டியதும், அவர்கள் வாகனத்தை திருப்பி விட்டனர். ஆனால், முதலில் சென்ற பைலட் - 1 வாகன போலீசார் சற்று தாமதமாகவே வாகனத்தை திருப்ப வேண்டிய நிலைக்கு ஆளாகினர்.
வீடு திரும்பிய முதல்வர், 10 நிமிட ஓய்வுக்கு பின், மீண்டும் தலைமைச் செயலகத்திற்கு புறப்பட்டார்; 2:30 மணிக்கு வீடு திரும்பினார்.
நேற்று அவர், சோர்வாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.