Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 5, 2016

இவரா உங்கள் முதல்வர் வேட்பாளர்.. விஜயகாந்த்தை கழுவி ஊற்றும் ஜெயா டிவி!


தேமுதிகவின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த்தை ஜெயா டிவியில் கிண்டலடித்தும், நக்கலடித்தும் ஒரு வீடியோவை உலா விட்டுள்ளனர். இவரா உங்கள் முதலமைச்சர் வேட்பாளர் என்ற பெயரில் வரும் அந்த வீடியோ காட்சியில் விஜயகாந்த் பொது இடங்களில் நடந்து கொண்ட கோமாளித்தனங்களைத் தொகுத்துக் கொடுத்துள்ளனர்.

தானாக சிரிப்பது, தள்ளாடியபடி நடப்பது, திடீரென முறைப்பது, அறிவு இருக்காடா உங்களுக்கு என்று தொண்டர்களைப் பார்த்துத் திட்டுவது, பாடிகார்டை முதுகில் குத்துவது, துண்டு போட வந்தவரை அந்தத் துண்டாலேயே அடிப்பது, திடீரென நாக்கைத் துருத்துவது, வரவேற்க வருபவரை பார்த்து முறைப்பது, அவரைத் தாங்கிப் பிடித்தபடி வரும் கட்சியினர் என பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் அவர் செய்த, அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளைத் தொகுத்து இவரா உங்கள முதலமைச்சர் வேட்பாளர் என்று கேட்டுள்ளனர் ஜெயா டிவியினர்.

மேலும் பத்திரிகையாளர்களைப் பார்த்து தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்க என்று கத்தியது, சென்னை பிரஸ் மீட்டில் தூ என்று பத்திரிகையாளர்களைப் பார்த்துத் துப்பியது, உளறியபடி பேசியது, பிரச்சாரக் கூட்டங்களில் தப்புத் தப்பாக பேசியது என பலவற்றையும் தொகுத்து கலாய்த்துள்ளனர்.

அவரது கூட்டத்தில் விஜயகாந்த்தைப் போலவே சில தொண்டர்கள் டான்ஸ் ஆடியதையும் இடையில் செருகியுள்ளனர்.

 ஒரு காட்சியில் தனது மனைவி பிரேமலதா அருகில் உட்கார்ந்திருக்கும் விஜயகாந்த், அப்படியே தலையை பின்னால் சாய்த்தபடி சிரிப்பது என பல காட்சிகளையும் இதில் சேர்த்து இவரா உங்கள் முதலமைச்சர் வேட்பாளர் என்று கிண்டலடித்துள்ளனர்.

சீன்களைத் தொகுத்து மியூசிக்கையும் கோர்த்து விட்டு, அவர் பேசிய பேச்சையும் சேர்த்து கூடவே வாராரய்யா... வர்றாரு... காமெடி பீஸு வர்றாரு, கண்னில் பட்ட ஆளையெல்லாம் கண்டபடி தாக்குறாரு... தள்ளாடி வர்றாரு... தாக்கு தாக்குனு தாக்குறாரு... உஷாரய்யா உஷாரு.. உளருவாரு உஷாரு என்ற கிண்டலையும் கோர்த்து விட்டுள்ளனர்.

 கூடவே என்ன பீலிங்... ஹேய் ஒய் ஆர் யூ கிரையிங்... தம்பி போங்க தம்பி.. போன்ற வடிவேலு வசனத்தையும் ஆங்காங்கே செருகி அழகு பார்த்துள்ளது ஜெயா டிவி. கடைசியில் கவுண்டமணியின் புகழ் பெற்ற ஐம் ஹேப்பி சிரிப்பை சேர்த்து படத்தை முடித்துள்ளனர்.. இவரா முதலமைச்சர் வேட்பாளரு என்ற கேள்வியுடன்!


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.