சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெறுவார். சசிகலாதான் முதல்வராவார். எனவே, அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பது வீண் என பா.ஜ.க எம்.பி. சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூரில் பா.ஜ.க சார்பில் போட்டியில் மனோகரனை ஆதரித்து சுப்பிரமணியன் சாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''ஜெயலலிதா அரசியலுக்கு வரும்போது, அவருக்கு ஒரு ரூபாய்கூட சொத்து கிடையாது. ஆனால், தற்போது ரூ.120 கோடி சொத்து இருப்பதாக வேட்பு மனு தாக்கலில் தெரிவித்துள்ளார். இதனால், அவர் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெறுவார். முதல்வராக ஆக மாட்டார். சசிகலாதான் முதல்வர் ஆவார். எனவே, அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பது வீண்.
இந்த தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பாளர் விடுதலைப்புலிகள் ஆதரவாளர் என அக்கட்சியினரே கூறி வருகின்றனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொலை செய்த விடுதலைப்புலிகள் ஆதரவாளருக்கு இந்த தொகுதியில் சீட் வழங்கப்பட்டிருக்கிறது.
ஏழை, எளியவர்களுக்கு தேவை அடிப்படை வசதிகள். அதை தவிர்த்து, உங்கள் வரிப்பணத்தில் இருந்து அதை செய்து கொடுக்காமல், டி.வி., ஸ்கூட்டர் என வழங்குகின்றனர். தமிழகத்தில் உள்ள அம்மா உணவகம், அம்மா பள்ளிக்கூடம், அம்மா ஸ்கூட்டர் போன்று விரைவில் அம்மாவுக்கு ஜெயிலும் வரும். சசிகலா தேவர் சமுதாயத்தை பயன்படுத்தி அரசியல் செய்து வருகிறார். தேவர் எனது சொத்து நாட்டுக்கு என்றார். ஆனால், சசிகலாவோ, நாட்டின் சொத்து எல்லாம் எனக்கு என கொள்ளையடித்து வருகிறார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலியல் 1.76 லட்சம் கோடி கொள்ளையடிக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட தி.மு.க.வினர் விரைவில் தண்டனை அனுபவிக்க போகிறார்கள். அதேபோல், அகஸ்டா ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் தண்டனை வாங்கிக் கொடுப்போம்.
தமிழகத்தில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திட்டம் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் ஊழல். நரேந்திர மோடி ஊழல் எதுவும் செய்யாதவர், அவரது அமைச்சர்களும் ஊழல் புகார்களுக்கு ஆளாகவில்லை. எனவே, பா.ஜ.க வேட்பாளர் மனோகரனுக்கு வாக்களியுங்கள்'' என்றார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.