மழைக்காலத்தில் நீர் தேங்க விடமாட்டோம் என்று தனது தேர்தல் பிரசாரத்தில் முதலவர் ஜெயலலிதா கூறினார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா, வாகன பிரசாரம் மேற்கொண்டபோது, ''வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டு அடிப்படை உதவிகள் வழங்கப்பட்டது.
சென்னை, மழைவெள்ளப் பாதிப்புக்கு உள்ளானபோது, ஆர்.கே.நகரில் மட்டும் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 48 கோடி ரூபாய்க்கு நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில், எவ்வளவு பெரிய மழை பெய்தாலும், சென்னையில் மழை வெள்ளம் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக நீர் தேங்காதவாறு மழை நீர் வடிகால் அமைக்கப்படும்.
தி.மு.க. ஆட்சி காலத்தில் இருந்த மின்வெட்டு, அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அந்த பேச்சுக்கு இடமில்லாமல் போனது. தமிழகத்தில் மின்வெட்டு இல்லாத நிலையை கொண்டு வந்து மக்களை மீட்டுள்ளேன். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல திட்டங்கள் எனது அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட 306 உட்புறச் சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. காசிமேடு மீன்பிடித் துறைமுகம் 92 கோடியே 63 லட்ச ரூபாய் செலவில் புனரமைக்கப் பட்டுள்ளது. தொழிற் பயிற்சி நிலையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. சாலைகள், பூங்காக்கள், மழைநீர் வடிகால் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியின் அடிப்படை கட்டமைப்புப்பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு ஏற்படுத்தப்படும். கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் எனக்கு நீங்கள் மகத்தான வெற்றியை பெற்றுத் தந்தீர்கள். அதேபோல், வருகின்ற தேர்தலிலும் நீங்கள், எனக்கு மகத்தானதொரு வெற்றியை பெற்றுத் தாருங்கள்" என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.