ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வரி பாக்கி வைத்திருக்கும் நபர்களின் பெயர்கள் பான்கார்டு தொடர்பு எண் உள்ளிட்ட விபரங்களுடன் நாளிதழ்களில் வெளியிடப்படும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
வருமான வரித் துறை அலுவலகம் கடந்த வருடம் முதல் வரி பாக்கி வைத்திருப்பவர்களின் பெயர்களை முன்னணி நாளிதழ்களில் வெளியிட்டு வருகிறது. கடந்த வருடம் பட்டியலில் 67 நபர்கள் இடம் பெற்றனர். ஆனால் இந்த வருடம் அவர்களின் பெயர், முகவரி, தொடர்பு எண், பான் கார்டு எண், வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த பட்டியலில் இடம்பெறும் நிறுவனங்களின் பங்குதாரரின் பெயரும் வெளியிடப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டுகளில் 20 கோடி ரூபாய்க்கு மேல் வரி பாக்கி வைத்திருப்பவர்கள் மீதுதான் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் தற்போது ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வரி பாக்கி இருந்தாலே நடவடிக்கை எடுக்கப்படும் என வருமான வரித்துறை அறிவிப்பு செய்துள்ளது.
வருமான வரித்துறையின் இந்த அறிவிப்பு எல்லா வகையான வரி செலுத்துவோருக்கும் பொருந்தும், 2016-17ம் நிதியாண்டில் மார்ச் 31 ம் தேதி வரை ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வரி பாக்கி வைத்திருக்கும் தனிநபர் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். இதை ‘name and shame’ என்ற கூறுகிறார்கள்.
இந்த பெயர் பட்டியல் அடுத்த வருடம் ஜூலை 31க்குள் வெளியிடப்படும் எனவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.