Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 16, 2016

தேர்தல் ஆணையத்துக்கு எதிராகப் பேசினால்... அச்சச்சோ..! -வடிவேலுவின் வெடி


தேர்தல் ஆணையத்துக்கு எதிராகப் பேசினால் நோட்டீஸ் அனுப்புவார்கள் என்று ஓட்டுப்போட்டுவிட்டு வந்து நடிகர் வடிவேலு சீரியசாக கூரினார்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 232 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாந்தி, விஜயகாந்த், வைகோ உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும், ரஜினிகாந்த், கமலஹாசன், அஜித், விஜய் உள்ளிட்ட திரை பிரபலங்களும் தங்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்து வருகின்றனர்.

அந்த வரிசையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார் நடிகர் வடிவேலு. தனது வாக்கை பதிவு செய்தபின் நடிகர் வடிவேலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''அனைவரும் ஜனநாயக் கடமையை நிறைவேற்ற வேண்டும்.

ஒரு தேர்வு போல இந்தத் தேர்தலில் யார் ஜெயிப்பார்கள் என்று எல்லோருக்கும் ஆர்வம் உள்ளது. மக்களுக்கு நன்மை செய்பவர்களுக்குத் தலைவணங்க வேண்டும்" என்றார். அப்போது செய்தியாளர்கள், தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சியில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது பற்றி கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த வடிவேலு, ''தேர்தல் ஆணையத்துக்கு எதிராகப் பேசினால் நோட்டீஸ் அனுப்புவார்கள். அது அவர்களுடைய முடிவு" என்றார். உடனே, சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் இந்தமுறை பிரசாரத்துக்குச் செல்லவில்லையா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ''அந்தக் கடையை மூடுங்க" என்று தனது ஸ்டைலில் காமெடியாக சொல்லிவிட்டு கிளம்பினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.