Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 24, 2016

500 டாஸ்மாக் கடைகளை மூடுவதால் அரசுக்கு எவ்வளவு இழப்பு?



6 வது முறையாகத் தமிழக முதல்வர் பொறுப்பில் ஜெயலலிதா அமர்ந்தவுடன்,தேர்தல் நேரத்தில் அவர் அளித்த வாக்குறுதிகளில் ஒவ்வொன்றாக நிறைவேற்றும் பணியைத் தொடங்கியுள்ளார். அதன் முதல்கட்டமாக டாஸ்மாக் மதுபானக் கடைகளின் விற்பனை நேரத்தில் 2 மணி நேரத்தைக் குறைக்கவும், மொத்தமுள்ள 6826 டாஸ்மாக் கடைகளில் 500 கடைகளை மூடவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அரசின் சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் இலவசத் திட்டங்களுக்கு டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானமே ஆதாரமாக இருக்கிறது என்று கூறப்பட்டு வரும் நிலையில்,500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால் தமிழக அரசுக்கு எவ்வளவு வருமான இழப்பு ஏற்படும் என்று தற்போது கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது,  

" தமிழகத்தில் 6 ஆயிரத்து 826டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.70 முதல் ரூ.80 கோடி வரை அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. கிராமப்புறங்களில் உள்ள கடைகளின் மூலம் நாளொன்றுக்கு ரூ.30 ஆயிரம் தொடங்கி, நகர்ப்புறங்களில் உள்ள கடைகளில் அதிகபட்சம் நாளொன்றுக்கு ரூ.10 லட்சம் வரை அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. இதனால், டாஸ்மாக்கின் மூலம் ஓர் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வரை தமிழக அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.

டாஸ்மாக் மதுக்கடைகளை காலை 10 மணிக்கு திறப்பதற்கு பதிலாக 12 மணிக்கு திறப்பதாலும், 500 கடைகளை மூடுவதாலும், அரசுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படாது. ஏனென்றால், டாஸ்மாக் கடைகளால் ஒரு நாளில் கிடைக்கும் வருவாயில், 5 சத வீதம் கூட காலை 10 முதல் 12 மணி வரை கிடைக்காது. மாலை நேரத்தில்தான்  விற்பனைதான் அதிகமாக இருக்கும்.

இதனால், அரசுக்கு நாளொன்றுக்கு ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையே இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன்படி பார்த்தால், ஓர் ஆண்டுக்கு 300 கோடி வரை மட்டுமே வருவாய் இழப்பு ஏற்படும். இந்தத்  தொகை மூடப்படுகிற கடைகளின் வருவாயை பொறுத்து மாறுபடவும் செய்யும்" என்று தெரிவித்தனர்.

வருமான இழப்பு குறைவாக இருந்தாலும் பொதுமக்கள் மத்தியில், டாஸ்மாக் கடைகளை  மூடும் நடவடிக்கையைத் தமிழக அரசு மேலும் தொடரவேண்டும் என்றும்  வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகள் அருகில் இருக்கும் டாஸ்மாக் அரசு மதுபானக் கடைகளை  அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.