Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 10, 2016

'மக்கள் நலக் கூட்டணிக்கு ஓட்டுப் போட்டால் இதுவெல்லாம் நடக்கும்!' - மலைக்க வைக்கும் மார்க்சிஸ்ட் சங்கரய்யா!


மக்கள் நலக் கூட்டணியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான தோழர் சங்கரய்யா,  மக்கள் நலக் கூட்டணியின் ஆட்சி எப்படி இருக்கும் என்பது பற்றி வீடியோ பதிவாக சமூக ஊடகத்தில் வெளியிட்டிருந்தார்.

அந்தப் பதிவில், " சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியாக உருவெடுத்தோம். இதன்பின்னர், விஜயகாந்த் எடுத்த முடிவின்படி ஆறுகட்சி கூட்டணியாக உருமாறினோம். தொடக்கத்தில் மதவாத, வகுப்புவாத சக்திகள் விஜயகாந்த்தை இழுக்க முயற்சி செய்தன. அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததன் மூலம் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு காலூன்ற இடமில்லாமல் போய்விட்டது. கருணாநிதியிடம் சேரவும் அவர் மறுத்துவிட்டார். எங்கள் அணியில் தே.மு.தி.கவும், த.மா.காவும் இணைந்தன் மூலம் ஆறுகட்சி கூட்டணியாக மும்முரமான பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறோம்.

அ.தி.மு.க மற்றும் தி.மு.கவின் முக்கிய நோக்கமே பெருமுதலாளிகளைக் காப்பாற்றுவதுதான். அவர்களின் கொள்கையும் இந்திய முதலாளிகளின் நலன்களுக்குக்காகத்தான் இருக்கிறது. அவர்களுடைய ஆட்சியில் ஊழலும் எதேச்சதிகாரமும் தலைவிரித்தாடுகின்றன. இதைப் பற்றியெல்லாம் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறோம். எங்களுடைய ஆறு கட்சிகளின் கூட்டணியானது, விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள், பாடுபடும் நடுத்தர தொழிலாளர்கள் என உழைப்பவர்களுக்கு நன்மை தரக் கூடிய ஆட்சியை உருவாக்கும். இப்போது வரையில் தனிநபர்கள் முடிவு செய்யும் ஆட்சிதான் தமிழகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாங்கள் உண்மையான கூட்டணி ஆட்சியை அமைப்போம்.



ஒரு கட்சி தவறு செய்தாலும், இன்னொரு கட்சி அதை சுட்டிக் காட்டும். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையானது மக்களின் கோரிக்கைகளை முழங்கும் மன்றமாக மாறும். சட்டமன்றக் காட்சிகள் அனைத்தும் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்பதையும் அறிக்கையில் கூறியிருக்கிறோம். ஒளிவுமறைவற்ற வகையில் சட்டமன்றத்தை நடத்தும்போது, மக்களுக்கு அனைத்து விஷயங்களும் தெரியும். சட்டமன்றத் தேர்தல் மூலம் புதிய வாழ்க்கையை உருவாக்கித் தர போராடிக் கொண்டிருக்கிறோம். புதிய ஜனநாயக, முற்போக்கான மாற்று சக்தி ஆட்சியமைக்க மக்கள் உதவுமாறு வேண்டிக் கொள்கிறேன்" என்கிறார் தோழர். சங்கரய்யா.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.