ஹிமாச்சல பிரதேசத்தில், அதிக பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ், மலைப் பாதையில் இருந்து, விழுந்து விபத்துக்குள்ளானதில், 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஹிமாச்சல பிரதேசத்தில், காங்., கட்சியை சேர்ந்த வீர்பத்ர சிங் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தின் மாண்டி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில், அரசு பஸ், 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
வழியில் நிலைதடுமாறிய அந்த பஸ், மலைப் பாதையில் இருந்து உருண்டு, பெரிய பள்ளத்தில் விழுந்தது. இதில், 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களில் பலர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. சாலை மோசமாக இருந்ததும், அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்றதும், விபத்துக்கு காரணம் என, விபத்தை பார்த்தவர்கள் கூறினர். விபத்து நடந்த இடத்துக்கு முதல்வர் வீர்பத்ர சிங் நேரில் சென்று பார்வையிட்டார். சம்பவம் குறித்து, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு, மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.