வீட்டில் இருந்து, மதுபான பாட்டில்கள் சிக்கிய வழக்கில், தேடப்பட்டு வந்த, பீஹார் எம்.எல்.சி., மனோரமா தேவி, நேற்று கோர்ட்டில் சரணடைந்தார். பீஹாரில், நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில், மனோரமா தேவி, அங்கு, எம்.எல்.சி., எனப்படும், சட்ட மேல்சபை உறுப்பினராக இருந்து வருகிறார்.
அவரது மகன் ராக்கி யாதவ், 30, கயா நகரில், காரில், சென்றபோது, பின்னால் வந்த கார், அவரது காரை முந்திச் சென்றது. ஆத்திரமடைந்த ராக்கி, துப்பாக்கியால் சுட்டதில், ஆதித்ய சச்தேவ், 19, என்பவர் உயிர்
இழந்தார். இதுதொடர்பாக, ராக்கி, அவரது தந்தை பின்டி யாதவ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, மனோரமா தேவியின் வீட்டில் நடந்த சோதனையில், மதுபான பாட்டில்கள் சிக்கின.
பீஹாரில், பூரண மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், அங்கு, மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மனோரமா தேவியை, ஐக்கிய ஜனதா தள கட்சி சஸ்பெண்ட் செய்தது. அவரை போலீசார் தேடி வந்தனர். அவரது வீட்டில், சிறுவன் ஒருவனை வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டது தொடர்பாகவும் போலீசார், வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், பல நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில், மனோரமா தேவி, நேற்று கோர்ட்டில் சரண்அடைந்தார். அவரை, 14 நாள், நீதிமன்ற காவலில், சிறையில் அடைக்க, கோர்ட் உத்தரவிட்டது. மனோரமா தேவி கூறுகையில், ''என் மீதான வழக்கிற்கு, பா.ஜ.,வின் அரசியல் சதியே காரணம். என் வீட்டில் இருந்து, மதுபான பாட்டில்கள் எதுவும் கைப்பற்றப்பட வில்லை,'' என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.