தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள தீவிர குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த, மிகப் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, புயலாக மாறியதால், தமிழகத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ய கூடும் எனவும், இப்புயல் அடுத்த 24 மணி நேரத்தில் காரைக்கால், நாகப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதனால், செவ்வாய்க்கிழமை வட தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் பலத்த, மிக பலத்த மழையும், தென் தமிழகத்தில் ஆங்காங்கே பலத்த மழையும் பெய்யும். இதேபோல், புதன்கிழமையும் வட தமிழகம், புதுச்சேரியில் ஆங்காங்கே பலத்த மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
எச்சரிக்கை: மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசக்கூடும். குறிப்பாக, தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் அதிகபட்சமாக 70 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும். மேலும் அடுத்த 72 மணி நேரத்துக்கு தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும். ஆகையால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.