வங்க கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றெழுத்த தாழ்வு காரணமாக சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுவருகின்றன.
சென்னை அருகே வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை 5.30 மணிக்கு சென்னை கடற்கரையை ஒட்டி ஆந்திரக் கடற்கரையை நோக்கி செல்லும் என்றும், இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மிக அதிகமான கன மழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைடுத்து, சென்னையில் நேற்று இரவு முதல் அடையாறு,திருவான்மியூர், பாரிமுனை, ஈக்காட்டுத்தாங்கல், நீலாங்கரை, வேளச்சேரி, திருவெல்லிக்கேணி, கோடம்பாக்கம், மேற்கு மாம்பழம், மயிலாப்பூர்
உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
தொடர் மழை காரணமாக சென்னை மாநகராட்சிமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் 7 பேர் கொண்ட துணை ஆணையர்கள் தலைமையிலான குழு மீட்புபணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். பேரிடர் மீட்புக்குழுினரும் மாநகராட்சிக்கு துணையாக மீட்பு பணியில் இறங்கியுள்ளனர். சென்னையில் சுரங்கப்பாதைகள், தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற பம்புசெட்டுகள் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் மழைநீரை வெளியேற்றி வருகின்றனர். தவிர 45 பேர் கொண்ட மீட்புக்குழுவினர் படகுகள் மூலம் தயார் நிலையில் உள்ளனர்..

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க உதவி எண்கள்
அறிவிக்கப்பட்டுள்ளது. 044-27237424, 27237425, 27237107, 2742692 தொடர்பு கொள்ளலாம். 044-27222000 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி அறிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.