Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 28, 2016

அக்னி நட்சத்திரம் ஓவர்... ஓவர்... ஆனாலும், மூன்று நாட்கள் கவனம்!


தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடைபெறுகிறது. ஆனாலும், மேலும் 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 'அக்னி நட்சத்திரம்' எனப்படும் ‘கத்தரி’ வெயில் காலம் கடந்த 4ம் தேதி தொடங்கியது. சென்னை, வேலூர், கடலூர் உள்பட தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் முதல் 13 நாட்களும், கடைசி 9 நாட்களும் 100 டிகிரிக்கு மேல் சுட்டெரித்த கத்தரி வெயில் காலம் இன்றுடன் விடைபெறுகிறது.

இடையில் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் கனமழை பெய்து, கத்தரி வெயிலுக்கு ஓய்வு கொடுத்தது. சென்னையில் அதிகபட்சமாக கடந்த 26ம் தேதி 106.16 டிகிரி வெயில் பதிவானது. கத்தரி வெயில் இன்று விடை பெற்றாலும், வெயிலின் தாக்கம் வரும் 3 நாட்கள் கூடுதலாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், தரைக் காற்று தொடர்ந்து மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி வீசி வருகிறது. கடல் காற்று கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி தாமதமாக வீசுகிறது. எனவே வரும் 3 நாட்களில் வெயிலின் அளவு வழக்கத்தை விட ஒரு டிகிரியோ அல்லது 2 டிகிரியோ கூடுதலாக இருக்கும். அதன் பின்னர் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கும்.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) ஒரு சில இடங்களில் கோடைமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. வெப்ப சலனம் காரணமாகவும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உண்டு. சென்னை நகரை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் ஒருசில இடங்களில் மழை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 5 செ.மீட்டர் மழையும், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 3 செ.மீட்டர் மழையும், திருப்புவனத்தில் 2 செ.மீட்டர் மழையும், ஈரோடு மாவட்டத்தில் 1 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது" என்று கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.