மகனின் திருமணத்திற்காக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், அரசுப் பள்ளிக்கு விடுமுறையளித்த தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பக்லா பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியொன்றில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வருபவர் சயீதா அஞ்சும். இவர், தனது மகனின் திருமண நிகழ்ச்சியையொட்டி, கடந்த 3-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பள்ளிக்கு விடுமுறை அளித்திருக்கிறார். அதற்கான அறிவிப்பும் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டு இருந்திருக்கிறது.
1 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள அந்த பள்ளியில், சுமார் 300 மாணவர்கள் பயில்கின்றனர். இந்நிலையில், அந்தப் பள்ளிக்கு தனிப்பட்ட காரணங்களுக்காக விடுமுறை அளிக்கப்பட்ட விவகாரத்தை, மாநில கல்வி அமைச்சரின் கவனத்திற்கு அப்பகுதி பஞ்சாயத்து தலைவர் கொண்டு சென்றிருக்கிறார்.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து அவர் விசாரிக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, அம்மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர். அதில், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு குறிப்பிட்ட தினத்தில் பள்ளிக்கு, தலைமை ஆசிரியை விடுமுறை அளித்து இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து, அந்த தலைமை ஆசிரியையும், அந்த சம்பவத்தில் தொடர்புடைய அந்தப் பள்ளியின் ஆசிரியர்களையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜம்மு மாவட்ட கல்வி அதிகாரி சமிதா சேத்தி தெரிவித்து உள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.