Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 7, 2016

அவர் படி, படி என்றார்... இவர் குடி, குடி என்கிறார்!' - யாரைக் குறிப்பிடுகிறார் குஷ்பு?


 'காமராஜர் மக்களை படி, படி என்றார். ஆனால் ஜெயலலிதாவோ, மக்களை குடி, குடி என்கிறார்'  என்று தேர்தல் பிரசாரத்தின்போது குஷ்பு கூறினார்.

திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரனை ஆதரித்து நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு வீதி வீதியாக பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ''தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் திருவாலங்காட்டில் உள்ள சர்க்கரை ஆலை ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். திருவள்ளூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.

கருணாநிதி சொன்னதை செய்வார். செய்வதைதான் சொல்வார். கடந்த தி.மு.க. ஆட்சியில் 7 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. பெண்கள் சுயமாக இருக்க வேண்டும் என்பதற்காக தி.மு.க. ஆட்சி காலத்தில் சுய உதவிக்குழுக்கள் கொண்டு வரப்பட்டது. ஜெயலலிதா அந்த திட்டத்தை முடக்கி விட்டார்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் செயல். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இலவச செல்போன் வழங்கப்படும் என கூறியிருப்பது ஏமாற்று வேலை. ஜெயலலிதாவின் அ.தி.மு.க. அரசு, கடந்த 5 ஆண்டு காலத்தில் எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைகூட ஜெயலலிதா சந்திக்கவில்லை.

காமராஜர் மக்களை படி, படி என்றார். ஆனால் ஜெயலலிதாவோ, மக்களை குடி, குடி என்கிறார். அதனால், தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெற்று கருணாநிதி 6-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்பார்" என்றார் உறுதியாக.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.