Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 5, 2016

நரை முடியை மறைக்கும் ஹேர் பேக்குகள்


நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொண்டு, தினமும் உடற்பயிற்சி செய்து மனதை ரிலாக்ஸாக வைத்து, ஒருசில ஹேர் பேக்குகளை முடிக்கு வாரம் ஒருமுறை போட்டு வந்தால், நரை முடியை மறைக்கலாம்.

* ஒரு பௌலில் 4 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1/4 கப் செம்பருத்தி பொடியை சேர்த்து பேஸ்ட் செய்து, தலையை நீரில் ஒருமுறை அலசி, பின் கலந்து வைத்துள்ள பேஸ்ட்டை ஸ்கால்ப்பில் படும்படி தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இதனால் நரை முடி மறையும்.

* ஒரு வாணலியில் கடுகு எண்ணெய் சிறிது ஊற்றி, அதில் கறிவேப்பிலை கொஞ்சம் போட்டு தாளித்து இறக்கி குளிர வைத்து, ஈரமான தலையில் தடவி 2 நிமிடம் நன்கு மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் முடியை அலச வேண்டும். இப்படி அவ்வப்போது செய்து வந்தால், நரை முடி மறையும்.

* அருகம்புல் பொடியை தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, ஈரமான ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து 1 மணிநேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இதனை வாரம் ஒருமுறை செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

* ஒரு பௌலில் 1 கப் ஹென்னா பொடியில் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதில் சிறிது தயிர் சேர்த்து கலந்து, தலையில் தடவி 1 மணி நேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இதனை வாரம் ஒருமுறை செய்து வரவேண்டும். கோடைக்காலத்தில் இந்த ஹென்னா ஹேர் பேக் உடல் சூட்டை குறைக்கும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.