Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 7, 2016

இதற்காக ஜெயலலிதாவை நம்ப வேண்டாம்! - கருணாநிதியின் எச்சரிக்கை Share


 'படிப்படியாக மதுவிலக்கு என்பது அ.தி.மு.க.வின் கபட நாடகம்'  என்று சென்னையில் மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தில் கருணாநிதி குற்றஞ்சாட்டினார்.

தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் ஐஸ் ஹவுஸ், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் உள்ளிட்ட தொகுதிகளில் தி.மு.க. தலைவர் கருணாநிதி வாகன பிரசாரம் மேற்கொண்டார்.



அப்போது அவர் பேசும்போது, ''சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மதுவிலக்கு கோரி போராட்டம் நடத்தியபோது காவல் துறையினர் அவர்கள் மீது தடியடி நடத்தி,  கைது செய்தனர். மதுவிலக்குக்காக தமிழகமே குரல் கொடுத்து வரும் இந்த நேரத்திலேகூட, மதுக்கடைகளை மூடக்கோரிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது காவல் துறையினர் தடியடி நடத்தி உள்ளனர்.



இதில் 30-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். அதில் 10 பேர் பெண்கள் ஆவர்.  மதுவிலக்குக்காகப் போராடுபவர்கள் மீது ஒருபுறம் தாக்குதல் நடத்திவிட்டு, மறுபுறம் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவோம் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது கபடநாடகம் ஆகும். காவல் துறையினரின் அராஜகம் இனியாவது நிறுத்தப்பட வேண்டும்.

தி.மு.க.வின் வெற்றிக்காக தொண்டர்கள் பாடுபட வேண்டும். இந்த நாடு, காடாக மாறிவிட்டது. நாட்டில் ஏதேதோ சம்பவங்கள் நடைபெறுகிறது. மழைக் காலத்தில் பேரிழப்புகளை மக்கள் சந்தித்தபோது மக்களை மதிக்காத அ.தி.மு.க. அரசை தூக்கி எறிய வேண்டும். தங்களது தேர்தல் அறிக்கையில் கற்பனைகளையும், இலவசங்களையும் அ.தி.மு.க. அறிவித்துள்ளது. அதையெல்லாம் நீங்கள் நம்ப வேண்டாம். நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளியுங்கள்" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.