Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 21, 2016

ஜெயா டிவியை ஒளிபரப்பும் அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை!


தமிழக அரசின் சாதனைகளை விளக்குவதற்காக தொடங்கப்பட்ட நடமாடும் டிஜிட்டல் திரை வாகனத்தில், ஜெயா டி.வி.யை நேரடியாக ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

கடந்த ஆட்சியின்போது ஜெயலலிதா அரசின் சாதனைகளை மக்களுக்கு விளக்கும் பொருட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நவீன வசதிகள் கொண்ட டிஜிட்டல் திரை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டு நகரம், கிராமங்களில் அரசின் சாதனைகள் குறித்து டிஜிட்டல் காட்சிகள் மூலம் ஒளிபரப்பப்பட்டது.

தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவை ஒளிபரப்பு செய்வதற்காக, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் டிஜிட்டல் திரை வாகனத்தில் தனியார் தொலைக்காட்சியான ஜெயா டி.வி.யை நேரடியாக ஒளிபரப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.


ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவை நேரடியாக அனைவரும் காண வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு என்று கூறப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு வாகனத்திலும், புதிய செட்டாப் பாக்ஸ்கள் மற்றும் டிஸ் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழக அரசு துறையின் வாகனத்தில் தனியார் தொலைக்காட்சியான ஜெயா டி.வி.யை ஒளிபரப்புவது விதிகளை மீறிய செயல் என நடுநிலையாளர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.