Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 30, 2016

பாதுகாப்பு கேட்கிறார் தங்க நகை பாபா


சிறிய நகைக் கடையைப் போல் காட்சியளிக்கும், 'தங்க பாபா' என்றழைக்கப்படும் சாது, தனக்கும், நகைகளுக்கும் பாதுகாப்பு கேட்டு போலீசில் மனு கொடுத்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரைச் சேர்ந்த தங்க பாபா, தன் உடலில், மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள, 11.5 கிலோ தங்க நகைகளை அணிந்துள்ளார். இதைத் தவிர, பல்வேறு உலோகங்களிலான கடவுள் விக்ரகங்களையும் தன்னுடன் காரில் எடுத்துச் செல்கிறார்.மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் நடந்த கும்பமேளாவில் பங்கேற்ற அவர், உத்தர பிரதேச

மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். ஆக்ராவுக்கு வந்துள்ள அவர், தனக்கும், தன்னுடைய நகைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று போலீசில் மனு கொடுத்தார். இதற்காக ஆக்ரா எஸ்.பி., அலுவலகத்துக்கு வந்த அவருடன், அங்கிருந்த மக்கள், 'செல்பி' எடுத்தனர்.
பரேலிக்கு செல்ல விரும்புவதாகவும், போலீஸ் பாதுகாப்பு கோரியும் அவர் மனு கொடுத்துள்ளார்.

''தங்கம் என்பது கடவுளின் வடிவம்; அதை அணியும்போது, மனம் அமைதி அடைகிறது.
அதனால்தான், 1972ம் ஆண்டு முதல் தங்க நகைகளை அணியத் துவங்கினேன்,'' என்கிறார்,
தங்க பாபா.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.