Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 24, 2016

முழுக்கை சட்டை மாணவர்கள் தேர்வு எழுத திடீர் தடை


ஐ.ஐ.டி., - ஜே.இ.இ., தேர்வு எழுத வந்த மாணவரின், முழுக்கை சட்டையை வெட்டி, அரை கை சட்டையாக மாற்றிய பின், தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்.
மைசூரின் சத்வித்யா கல்லுாரியில், நேற்று முன்தினம் ஐ.ஐ.டி., - ஜே.இ.இ., தேர்வு நடந்தது. மாணவ, மாணவியர் அனைவரும் தேர்வு அறைக்கு சென்று, தங்களுக்கான இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். அப்போது, தேர்வு மேற்பார்வையாளர், முழுக்கை சட்டை அணிந்திருந்த மாணவர்களை, தேர்வு அறையிலிருந்து வெளியேற்றினார்.
மாணவியொருவர் முழுக்கை கொண்ட குர்தா அணிந்திருந்தார். அவரையும், அறையிலிருந்து வெளியில் அனுப்பி, உடையை மாற்றி வரும்படி அறிவுறுத்தினார். அங்கிருந்து சென்ற மாணவி, மீண்டும் தேர்வு எழுத வரவில்லை.
கல்லுாரி அருகில் வசிக்கும் சில மாணவர்கள், வீட்டுக்கு சென்று அரை கை சட்டை அணிந்து வந்தனர். வெகு தொலைவில் இருந்து வந்த மாணவர்கள், தேர்வு எழுத அனுமதி கிடைக்காமல் சோகத்துடன் திரும்பிச் சென்றனர்.
தாமதமாக வந்த மாணவரை, அறைக்கு வெளியே தடுத்து நிறுத்திய மேற்பார்வையாளர், முழுக்கை சட்டை தடை செய்யப்பட்டுள்ளதை தெரிவித்தார்.
'இது என் அதிர்ஷ்டமான சட்டை. அனைத்து தேர்வுகளுக்கும் இதை தான் அணிவேன்' என்று அம்மாணவர் எவ்வளவு வாதாடியும், அவரை அனுமதிக்கவில்லை. பின், அவர், தன் சட்டையின் கைகளை வெட்டி, அரை கையாக அணிந்து, தேர்வெழுத சென்றார்.
இந்த சம்பவம் மாணவர்களுக்கு அதிருப்தியை
ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தேர்வு மேற்பார்ளையாளரிடம் கேட்டபோது, 'எங்கள் வேலையை நாங்கள் செய்துள்ளோம். முழுக்கை சட்டை, பெரிய பட்டன்கள் உள்ள சட்டை, நகைகள் அணிந்து வரும் மாணவ, மாணவியரை தேர்வு அறைக்குள் அனுமதிக்க வேண்டாமென்று, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்; அதன்படி நடந்துகொண்டோம்' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.