Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 7, 2016

பெட்ரோல் இலவச வினியோகம் : 'பங்க்'கிற்கு அதிகாரிகள் 'சீல்'


தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தொகுதிக்குட்பட்ட சோழகன்குடிகாடு பகுதியை சேர்ந்தவர் சிவராஜா. அ.தி.மு.க., நிர்வாகியான இவர், பாப்பநாட்டில் பெட்ரோல் பங்க் வைத்துள்ளார்.

இந்த பங்கில், ஆளுங்கட்சியினர், வாக்காளர்களுக்கு வழங்கும் டோக்கனுக்கு, பெட்ரோல், டீசல் இலவசமாக வழங்கப்படுவதாக, தேர்தல் அதிகாரி சகாயராஜுக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, தேர்தல் அதிகாரி சகாயராஜ், பறக்கும்படை அதிகாரி காமராஜ், ஒரத்தநாடு டி.எஸ்.பி., செங்கமலகண்ணன், டி.எஸ்.ஓ., கஜேந்திரன் ஆகியோர் பெட்ரோல் பங்கில் திடீர் சோதனை நடத்தினர்.அப்போது, அங்கு ஏராளமான டோக்கன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

602 பேருக்கு டோக்கன் வழங்கி, இலவசமாக பெட்ரோல், டீசல் வழங்கியது கண்டறியப்பட்டது. இதையடுத்து, தேர்தல் விதிகளை மீறி பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டதாக வழக்குப் பதிவு செய்து, பெட்ரோல் பங்கிற்கு அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.