Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 6, 2016

அம்மா புராணம் பாடுறதுக்காக இலவச செல்போன் கொடுக்குறீங்களா.?! -கடுப்படிக்கிறார் விஜயகாந்த்


அம்மா புராணம் பாடுவதற்காகவா இலவச செல்போன் கொடுக்குறீங்க என்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை பற்றி விமர்சித்துள்ளார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்.

கடலூர் மற்றும் விருத்தாசலத்தில் நடைபெற்ற தே.மு.தி.க., த.மா.கா., மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசும்போது, ''இந்த தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் போர்.

தமிழக அரசியலில் இருந்து தி.மு.க., அ.தி.மு.க.வை அப்புறப்படுத்த வேண்டும். அதனால், அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளை மக்கள் இந்த தேர்தலில் புறக்கணித்தி விரட்டியடிக்க வேண்டும். நான் கேட்கிறேன், மக்களுக்காக நான்... மக்களுக்காக நான் என்று கூறிக்கொள்ளும் ஜெயலலிதா, சிறுதாவூர் பங்களாவை ஏழைகளுக்கு கொடுக்க முன்வருவாரா?

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டு மக்களை குடிப்பழக்கத்திற்கு அடிமையாக வழிவகுத்துவிட்டார். ஜெயலலிதா வெளியிட்டுள்ள அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அனைவருக்கும் இலவச செல்போன் உள்ளிட்ட இலவச திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுகிறார்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள இலவச செல்போன், அம்மா புராணம் பாடுவதற்காகவா? அந்த போனை நீங்கள் டயல் செய்தால் கூட ‘அம்மா... அம்மா... என்றுதான் கேட்கும்.

‘காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுகிறார். அவர் எனது நீண்டகால நண்பர். எனது பிறந்த நாளின்போது வாழ்த்து தெரிவிப்பார். மக்கள் நல கூட்டணிக்கு நான் வர வேண்டும் என்று விரும்பி அழைத்தார்.

அவர் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் வெற்றி பெறுவது உறுதி. அவருக்கு மோதிரம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்." என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.