Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 21, 2016

விரலை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய அ.தி.மு.க., தொண்டர்


மீண்டும் ஜெயலலிதா வெற்றி பெற்றதற்காக, ராசிபுரத்தில் அ.தி.மு.க., தொண்டர், தன் சுண்டுவிரலை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினார். தற்போது அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ், 50; கட்டில் வியாபாரம் செய்து வருகிறார். இவர், 35 ஆண்டுகளாக, அ.தி.மு.க.,வில் தீவிர தொண்டராக இருந்து வருகிறார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், ஜெ., மீண்டும் முதல்வரானால், ராசிபுரம் முனியப்பன் கோவிலில் தன் சுண்டு விரலை வெட்டி, உண்டியலில் காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொண்டார்.

தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்றதையடுத்து, தன் வேண்டுதலை நிறைவேற்ற, ராசிபுரம் - நாமக்கல் சாலையில் உள்ள முனியப்பன் கோவிலில், நேற்று காலை 9:௦௦ மணிக்கு, தங்கராஜ் தன் சுண்டு விரலை வெட்டிக் கொண்டார். துண்டான விரல் கீழே விழாமல் தொங்கி கொண்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர், தங்கராஜை ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கிருந்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.