கேரள மாநிலம் கொச்சியில், கடற்படையைச் சேர்ந்த சில அதிகாரிகள் தமக்குள் மனைவியரை பகிர்ந்து கொள்வதாகக் கூறப்படுவது குறித்து, எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் கொடுமைகேரள மாநிலம் கொச்சியில் உள்ள கடற்படையைச் சேர்ந்த ஒரு அதிகாரியின் மனைவி, கடந்த, 2013ல் ஒரு புகார் கொடுத்தார்.அதில், 'என் கணவர் மற்றும் சில கடற்படை அதிகாரிகள், தங்களுக்குள் மனைவியரை பகிர்ந்து கொள்கின்றனர். இதில், ஒரு அதிகாரியின் மனைவிக்கும் தொடர்பு உள்ளது. என்னையும் அதற்கு வற்புறுத்தினர். என் கணவருடைய நண்பர்கள், கடற்படை அதிகாரிகள் என்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தினர்' என, அந்தப் பெண் கூறியிருந்தார். இதனிடையே, தன்னுடைய கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தார் சித்ரவதை செய்வதாகவும் அந்தப் பெண் புகார் கொடுத்திருந்தார். இந்த சம்பவம், கேரளாவில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அந்தப் பெண், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அதை விசாரித்த, தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான சுப்ரீம் கோர்ட் அமர்வு, பிறப்பித்த
உத்தரவு:கடற்படை அதிகாரிகள் மீதான இந்த புகார் குறித்து, சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை. டி.ஜி.பி., அந்தஸ்தில் உள்ள போலீஸ் அதிகாரியின் தலைமையில், சிறப்பு விசாரணைக் குழுவை கேரள அரசு அமைக்க வேண்டும்.
நிராகரிப்புமூன்று மாதத்துக்குள் அந்தக் குழு விசாரணை நடத்தி, அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.மேலும், கேரள ஐகோர்ட்டில் உள்ள வழக்கை, டில்லிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரிக்கிறோம்.இவ்வாறு சுப்ரீம் கோர்ட் அமர்வு தன் உத்தரவில் கூறியுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.