தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 39 ஆயிரத்து 697 பேர் பிளஸ்டூ பொதுத் தேர்வு எழுதியுள்ளனர். அதன் முடிவுகள் இன்று காலை 10 மணி 31 நிமிடத்திற்கு வெளியிடப்படுகின்றன. தேர்வு முடிவுகளை WWW.TNRESULTS.NIC.IN, WWW.DGE1.TN.NIC.IN, WWW.DGE2.TN.NIC.IN ஆகிய இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையத்திலும், அனைத்து மாவட்ட மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை இலவசமாக இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் பெறுவதற்கும் மறு கூட்டலுக்கும் இன்றும் நாளையும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 19ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் அவற்றை பயன்படுத்தி கல்லூரிகளில் விண்ணப்பிக்கலாம் எனவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.